பதுளை மாவட்ட செயலாளரின் செய்தி

விடியும்அருணோதயத்துடன் மீள் எழும் பதுளை

இலங்கையில் பதுளை மாவட்டமானது,1815ஆம் வருடத்திற்கு முன்னர் சுய பொருளாதாரத்திற்கு கீழ் இயங்கிய நிலையில், காலணத்துவத்திற்கு உட்பட்ட காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும், பொருளாதார, சமூக, கலாரசார, மற்றும் கல்வி எண்ணக்கருக்களில் அடைவு மட்டத்தினை எட்ட முடியாத ஒரு அடிமைப்பட்ட நிலையில் காணப்பட்டது.
அதே போல், ஒரு சகாப்த காலமாக இலங்கைக்கு மிகப் பாரியதொரு அண்ணிய செலாவணியிணை ஈட்டித் தந்த பெருந்தோட்டத் துறையினர் இன்றும் தினக்கூலி சம்பளத்திட்டத்தின் கீழ் வருமானமீட்டி வருகின்னமை மிகவும் வருந்தக்கூடிய ஒன்றாகும். அவர்களின் பொருளாதார, சமூக பங்குப்பற்றல் மற்றும் எழுத்தறிவு வீதம் இழிவளவில் காணப்படுவதும் வருந்தத்தக்க விடயமாகும்.
இம் மாவட்டத்தில் காணப்படும் பல்வேறுப்பட்ட பொருளாதார,கல்வி, சமூக, கலாசார மற்றும் ஏனைய வழிமுறைகளிலும் அபிவிருத்தி சார் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வினை பெற்றுத் தரும் நோக்கில்செயற்படுவது இவ் வேலைத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
புதியதொழில் நுட்பத்தின் பிரயோகத்தின் மூலம் கொண்டு நடத்த எதிர்பார்க்கப்படும் இவ்வேலைத்திட்டம் பிரதானமாக பொதுமக்களின் பங்குபற்றலினையும் தன்னார்வளர்களின் விசேட திறன்களினையும் பிரயோகிப்பதுடன், எதிர்காலத்திலும் முறையாக கொண்டுச் செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் பிறந்து, பதுளை மாவட்டத்தில் வளர்ந்து இம்மாவட்டத்திலேயே கல்வியினை பெற்றுக் கொண்ட பெரும்பாலானோர், பதுளை மாவட்டத்திற்குள்ளும் மாவட்டத்திற்கு வெளியிலும் மற்றும் சர்வதேச மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களை ஒன்றுபடுத்தி இம் மாவட்டத்தினை சேர்ந்த பிரஜைகளின் வாழ்வியல் நிலையினை உயர்த்துவதினை இலக்காக கொண்ட “அருணோதய”த்தின் மூலம் பதுளை மாவட்டத்தினை மீள்பிறப்பாக்க நிலைமைக்கு இட்டுச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.